

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மதுவிலக்கு மற்றும் பலவேறு நலத் திட்டங்களுடன் வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி வேடபாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறேன் என்றார்.