

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஷெனாய்நகர் வரை சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இரண்டு வாரங்களில் தொடங்கும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 24 கி.மீ தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதையாகவும், 21 கி.மீ தூரத்துக்கு உயர்மட்ட ரயில்பாதைகள் (13 ரயில்நிலையங்கள்) மூலமாகவும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தற்போது ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரையில் மொத்தம் 8 கி.மீ தூரத்துக்கு 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிக் கப்பட்டுள்ளன. தற்போது, ஏசி வசதியுடன் கூடிய ரயில் நிலையங் களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கோயம் பேட்டில் இருந்து ஷெனாய்நகர் வரையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான முழு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கோயம்பேட்டில் இருந்து ஷெனாய்நகர் வரையில் ரயில் பாதைகள், சிக்கனல்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட் டுள்ளன. இந்த பாதையில் ஏற்கெனவே, ரயில் இன்ஜின் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த 2 வாரங்களில் இந்த வழித் தடத்தில் மெட்ரோ ரயில் மூலம் சோதனை நடத்தவுள்ளோம். குறைந்தது 5 அல்லது 6 மாதங் களுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்திய பிறகே, மக்களின் சேவைக்கு திறந்து வைக்கப்படும்” என்றனர்.