

திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள், வாக்காளர் களுக்கு பணம் அளித்து கொத் தடிமைகளாக்கும் முயற்சியில் ஈடு படுவதாக மத்திய சாலை, கப்பல் மற்றும் தரைவழிப் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.குமரனை ஆதரித்து, அருவங் காடு, வெலிங்டன் மற்றும் கோத்த கிரியில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:
வாகன சோதனையின்போது கைப்பற்றப்படும் தொகையில், குறைந்த அளவே தேர்தல் பறக்கும்படையினர் கணக்கில் காட்டுகின்றனர். புதிய யுக்தியாக ஆம்புலன்ஸ் மூலமாக பணம் கடத்தப்படுகிறது. காவல்துறை வாகனங்கள் மூலமாகவும் பணம் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலமாக ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுவதாக செய்தி வருகிறது. இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
திமுக, அதிமுக ஆகிய கட்சி கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, 5 ஆண்டுகளுக்கு மக்களை கொத்தடிமைகளாக வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தேர்தல் ஆணையமும் துணைபோகிறது என கருதப்படும்.
ஆளுங்கட்சியினர் பள்ளிகளில் பணம் பதுக்கி வருகின்றனர். பதுக்கிவைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளி அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.