Published : 30 Apr 2016 08:58 AM
Last Updated : 30 Apr 2016 08:58 AM

மே 1 முதல் கி.வீரமணி பிரச்சாரம்

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் மே 1-ம் தேதி முதல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை: வரும் மே 16-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மே 1 முதல் 14-ம் தேதி வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மே 1-ம் தேதி பாலக்கோடு, தருமபுரி, 2 - அரூர், 3- துறைமுகம், 4 - சைதாப்பேட்டை, 6 - கிணத்துக்கடவு, 7- குன்னூர், 9 - நிலக்கோட்டை, திண்டுக்கல், 10 - கீழ்வேளூர், திருவாரூர், 11 - அரியலூர், திருவையாறு, 12 - நீடாமங்கலம், ஒரத்தநாடு, 13 - திருவெறும்பூர், திருச்சி மேற்கு, 14 - தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்வார்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி மே 1 முதல் 14-ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார்.

அதேபோல் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், நடிகர்கள் போஸ் வெங்கட், வாசு விக்ரம், திண்டுக்கல் ஐ.லியோனி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோரும் மே 1-ம் தேதி முதல் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x