

நீலகிரி மாவட்டம் உதகை நகருக்குபார்சன்ஸ்வேலி அணையில் இருந்துதினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்குழாயில், நேற்று காலை உடைப்பு ஏற்பட்டது.
உதகை - குன்னூர் சாலை சவுத்வீக் பகுதியிலுள்ள தண்ணீர் சேமிப்பு தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு. அழுத்தம் காரணமாக நீரூற்றுபோல சுமார் 10 அடிக்கு மேல் தண்ணீர் பீய்ச்சியடித்தது. சாலையின் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டதால், வாகனங்கள் மீதும் தண்ணீர் பீய்ச்சியடித்தது.
இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், நகராட்சி ஊழியர்கள் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடிகுழாய் உடைப்பை சரி செய்தனர். இருப்பினும், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது.