Published : 16 Apr 2016 08:42 AM
Last Updated : 16 Apr 2016 08:42 AM

பொது இடங்களில் பாதுகாப்பு இல்லாததால் இளம் பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை இழக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி ஆதங்கம்

பொது இடங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் இளம் பெண்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளை இழக்கின்றனர் என்று அமெரிக்க தூதரக அதிகாரி ஏரியல் பொலாக் தெரிவித்துள்ளார்.

குற்றத் தடுப்பு மற்றும் பாதிக் கப்பட்டோருக்கான பன்னாட்டு அறக்கட்டளை மற்றும் சென்னை யில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில், ‘பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறை’ என்ற தலைப்பிலான 3 நாள் ஓவியக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நேற்று தொடங்கியது. அதில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் 50 பேர் பங்கேற்று, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த கண்காட்சியை அமெரிக்க தூதரகத்தின் பொது விவகாரங்கள் துறை அதிகாரி ஏரியல் பொலாக் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

பொது இடங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் இளம் பெண்களால் வெளியில் வரமுடிய வில்லை. இதனால் அவர்கள் இளம் வயதில் கல்வியையும், பின்னர் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளையும் இழக்கின்றனர். பொது இடங்களில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும். அதற்கான களமாகத்தான் இந்த ஓவியக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்று பெண்கள் தங்கள் அனுபவங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு களை தடுப்பதற்கான வழிமுறை களை விவாதிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிறுவனர் பிரசன்னா கெத்து, சமூக உளவியல் பிரிவு ஒருங் கிணைப்பாளர் ஸ்வேதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x