

திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தில் அக்னி கலசம் அகற்றப்பட்டதற்கு திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரு மான வ.கவுதமன் கண்டனம் தெரி வித்துள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தில் சாலை விரி வாக்கப் பணிக்காக, கடந்த 1989-ல் நிறுவப்பட்ட வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்றப்பட்டது. இதனை கண்டித்து, பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தை திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கவுதமன் நேற்று பார்வை யிட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும் போது, “நாயுடு மங்கலத்தில் வன்னியர்கள் மதிக்கும் அக்னி கலசத்தை இரவோடு, இரவாக, தமிழக அரசாங்கத்தைச் சேர்ந்த அதி காரிகளால் பெயர்த்தெடுத்து மறைத்து வைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
4 பேர் மட்டுமே பொறுப்பு
ஜாதி கலவரத்தை ஒரு அரசாங்கமே நடத்துவது, நடத்த நினைப்பது என்பது நேர்மை யற்றது, அறமற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, உங்களுக்கு சம்பந்தம் இல்லையா. தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சிலைகளை அகற்றிவிடுவீர்களா? இப்பகுதியில் ஜாதி கலவரம் ஏற்பட்டால் கோட்டாட்சியர் வெற்றிவேல், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர்தான் பொறுப்பு.
ஒரு லட்சம் அக்னி கலசம்
தமிழர்கள் வாக்களித்த காரணத்தால்தான், கோட்டைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென் றுள்ளார். வட மாவட்டங்களில் பட்டியல் சமூகம் மற்றும் வன்னியர்களையும், தென் மாவட்டங்களில் தேவர்கள் மற்றும் தேவேந்திர குல வேளா ளர்களை அடித்துக்கொள்ள வைத்துவிட்டு, நீங்கள் மட்டும் வாழ்வீர்களா?, ஆள்வீர்களா?. நீங்கள் நினைப்பதுபோல் ஜாதி கலவரம் உருவானாலும், அதனை அணைக்க நான் வந்து நிற்பேன். வட மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒரு லட்சம் அக்னி கலசம் வைத்தால், உங்களால் என்ன செய்ய முடியும். வன்மத்தை உருவாக்காமல், அமைதியை ஏற்படுத்துங்கள். தமிழர்கள் இடையே மகிழ்ச்சியை உருவாக்குங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள பெருங் குடியான வன்னியர் குடியை வன்மமாக பார்த்தால், உள்ளாட்சித் தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெற முடியாது. உள்ளாட்சித் தேர்தலுக்குள்ளாக அக்னி கலசத்தை மீண்டும் வைக்கவில்லை என்றால், நான் வருவேன், என்னை யாராலும் தடுக்க முடியாது, அக்னி கலசத்தை நிறுவாமல் அசைய மாட்டேன்” என்றார்.