

பாமக நிர்வாகிகள், பேச்சாளர்கள் நாகரிகமாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதன்முதலில் தொடங்கியது பாமகதான். ஓராண்டுக்கு முன்பே சேலத்தில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்து பாமக தொடங்கிய பிரச்சாரம் தமிழகம் முழுவதும் உள்ள மக் களை கவர்ந்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகவும் நாகரிகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பாமகவின் கொள்கைகள், நோக்கங்கள், கடந்த கால சாதனைகள் ஆகிய வற்றைக் கூறி மட்டுமே வாக்கு கேட்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் யாரை யும் விமர்சிக்கக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தியிருந் தேன். எனது வழிகாட்டுதல்களை பாமக மாநில நிர்வாகிகளும், பேச்சாளர்களும் சிறிதும் நெறி பிறழாமல் கடைபிடித்து, கண்ணிய மாக பரப்புரை செய்து வருகின்ற னர். அன்புமணி ராமதாஸின் பிரச்சாரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இனிவரும் நாட்களில் பரப்புரை தீவிரமடையும். அப் போது பாமகவுக்கு எதிராக அவ தூறான குற்றச்சாட்டுகளையும், பாமக தலைமை மீது கண்ணியமற்ற தாக்குதலையும் எதிர்க்கட்சிகள் தொடுக்கக்கூடும். அத்தகைய தருணங்களில் பாமக நிர்வாகிகளும், பேச்சாளர்களும் நிலை தவறியோ, நிதானம் இழந்தோ அவர்களின் அவதூறு குற்றச்சாட்டுக்கு அவர்களின் பாணியிலேயே பதில் அளிக்க முனையக்கூடாது.
மற்ற கட்சிகள் எதைப் பேசினாலும் பாமக நிர்வாகிகளும், பேச்சாளர்களும் நாகரிகமான, வளர்ச்சி சார்ந்த அரசியலையும், இரு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான செயல்திட்டங்களைப் பற்றியும் மட்டுமே பேச வேண்டும். தேர்தல் வரை மட்டுமின்றி தேர்தலுக்குப் பிறகும் இதே நிலைப்பாடு தொடரவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.