Published : 17 Apr 2016 10:34 AM
Last Updated : 17 Apr 2016 10:34 AM

ஒவ்வொரு வாக்காளரையும் சந்திக்க முடிவு: 10 வகையான பிரச்சார உத்திகளுடன் களம் இறங்கும் திமுக வேட்பாளர்கள்

தினமும் 10 மணி நேரம் நடை பயணம், 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்பன உட்பட 10 வகையான பிரச் சார உத்திகளுடன் திமுக வேட் பாளர்கள் களம் இறங்க தயாராகி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகு திகளை ஒதுக்கிவிட்டு, 174 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தேர்தல் அறிக் கையும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள், ஆளும்கட்சி மீதான குற்றச்சாட்டுகளை மக்க ளிடம் கொண்டு செல்ல 10 வகையான பிரச்சார உத்தி களை வகுத்து திமுக வேட்பாளர் கள் களம் இறங்க தயாராகி வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

திமுக தேர்தல் அறிக்கையில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பல பிரச்சார உத்திகளை திமுக வகுத்துள்ளது. குறைந்தபட்சம் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப் படுவர். முக்கிய தொகுதிகளில் 60 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் போடப்படும்.

தினமும் காலை, மாலையில் 10 மணி நேரம் நடைபயணம் மூலம் மக்களை சந்திப்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 முதல் 20 பணிக் குழுக்களை நியமிப்பது, ஒவ்வொரு தெரு விலும் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடத்துவது, இசைக் கருவிகள் மற்றும் கிராமப்புற கலைக்குழுக்கள் மூலம் வாக் காளர்களை கவர்வது, திண் ணைப் பிரச்சாரம் மேற் கொள்வது, இலக்கிய துறை யைச் சேர்ந்த கவிஞர்கள், பட்டி மன்ற பேச்சாளர்கள் மூலம் வாக்குசேகரிப்பு, சிறந்த என்ஜி ஓக்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் வாக்கு சேகரிப்பு, சமூக வலைதளங்களில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய் வது, பட்டதாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் மூலம் நடுத்தர மக்கள் வசிக்கும் குடி யிருப்பு பகுதியில் பிரச்சாரம் செய்வது என 10 அம்ச உத்திகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப் பேட்டை தொகுதி வேட்பாளரு மான மா.சுப்பிரமணியன் கூறும் போது, ‘‘திமுக தேர்தல் அறிக் கையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் 10 வகையான தேர்தல் உத்தி களை வகுத்துள்ளோம். சைதாப் பேட்டையில் உள்ள 254 வாக்கு சாவடிகளிலும் தலா 10 முதல் 20 பணிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இணைய தளங்கள் மூலமும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். எனது தொகுதியில் உள்ள 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர் களையும் நேரில் சந்திக்க உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x