

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், கொட்டமேடு பகுதியில் ‘எய்டு இந்தியா’ தொண்டு நிறுவனம் சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’திட்டம் தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது.
இந்தப் பேரணியை கொட்டமேடு ஊராட்சி தலைவர் சசிகலாகண்ணபிரான் தலைமை தாங்கினார்.மயிலை ஊராட்சித் தலைவர் மகாதேவன் தொடங்கி வைத்தார்.
கொட்டமேடு கிராமத்தில் தொடங்கிய இந்தப் பேரணி கரும்பாக்கம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் எய்டு இந்தியா ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.விமலா, மயிலை ஊராட்சி செயலர் முனுசாமி, எய்டு இந்தியா ஒன்றிய கருத்தாளர்கள் கண்ணகி, ஜான்சிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிறைவாக இல்லம் தேடிக் கல்வி பயிற்றுவிக்கும் 20 தன்னார்வலர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.