Last Updated : 19 Apr, 2016 12:29 PM

 

Published : 19 Apr 2016 12:29 PM
Last Updated : 19 Apr 2016 12:29 PM

அருப்புக்கோட்டையில் அரசியல் வாழ்வு சரிந்துவிடும் அபாயம்: கடும் போட்டியை சந்திக்கும் முன்னாள் அமைச்சர்கள்

தங்களது அரசியல் வாழ்வு முற்றிலுமாக சரிந்துவிடும் நிலை உள்ளதால் அருப்பு க்கோட்டையில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தினும், அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனும் தீவிர போட்டியை எதிர் கொண் டுள்ளனர்.

தங்களது அரசியல் வாழ்க்கை தொடருமா? அல்லது முடிவு பெறுமா? என்கிற சூழ்நிலையில் அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் இம்முறை கடும் போட்டியை சந்திக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் அருப்பு க்கோட்டைக்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. காரணம், 1977-ல் நடைபெற்ற தேர்தலில் அருப்புக்கோட்டையில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வென்று முதல்வர் ஆனார்.

அதைத் தொடர்ந்து 1980 மற்றும் 1984-ல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவும், 1989-ல் திமுகவும், 1991-ல் அதிமுகவும் வென்றன. 1996, 1998-ல் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. 2001-ல் அதிமுகவும், 2006-ல் திமுகவும் வென்றது. 2011-ல் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் வென்றார்.

அதேபோல் சாத்தூர் தொகு தியில் 1977, 1980, 1984-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இவர் 1990-ல் திமுகவில் இணைந்தபின் 1991-ல் மீண்டும் சாத்தூரில் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து 2001, 2006-ல் நடைபெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்று, அமைச் சராகவும் பொறுப்பு வகித்தார்.

சாத்தூரில் தொடர்ந்து போட் டியிட்டு வென்றதால் அவர் சாத்தூர் ராமச்சந்திரன் என்றே அழைக்கப்பட்டார். ஆனால், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், சாத்தூர் தொகுதியில் இருந்த சில பகுதிகளில் அருப்புக்கோட்டை தொகுதியில் சேர்க்கப்பட்டன.

இவை, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு அதிக வாக்குகளை அள்ளித்தந்த வை என்பதால் கடந்த 2011-ல் நடைபெற்ற தேர்தலில் அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போட்டி யிட்டார்.

அந்த தேர்தலில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 65,908 வாக்குகள் பெற்றாலும்கூட, எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் 76,546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும், திருச்சுழி தவிர மற்ற 6 தொகுதிகளிலும் திமுக தோல்வியை சந்தித்தது. இதனால், விருதுநகர் திமுக மாவட்ட செயலராக பொறுப்பு வகித்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு கட்சியில் செல்வாக்கு சரியத் தொடங்கியது.

நடைபெற உள்ள தேர்தலிலும் அருப்புக்கோட்டையில் திமுக சார்பில் தெற்கு மாவட்டச் செயலரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். திண்ணைப் பிரச்சாரத்தை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளார். அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளராக தொகுதி செயலர் எம்.ஜி.முத்துராஜா அறிவி க்கப்பட்டார். தொகுதியில் இவ ருக்கு செல்வாக்கு இல்லை யென்பதால் திமுகவின் வெற்றி உறுதி எனக் கூறப்பட்டது. ஆனால், மறுநாளே முத்துராஜா மாற்றப்பட்டு முன்னாள் அமை ச்சரும் எம்.எல்.ஏ.வுமான வை கைச்செல்வனுக்கு வாய்ப்பு அளி க்கப்பட்டது.

கடந்த முறை வென்ற வைகைச் செல்வனுக்கு அமைச்சர் பதவி வழங்க ப்பட்டது. தொடர்ந்து வந்த புகார்களால் அவர் பதவி பறிக்கப்பட்டு, படிப்படியாக கட்சியிலும் ஓரங்கட்டப்படும் நிலை ஏற்பட்டது. வேட்பாளர் அறிவிப்பில் முதல் பட்டி யலில் தனது பெயர் இல் லாததால் மனமுடைந்த வை கைச்செல்வனுக்கு, அடுத்து வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் சுறுசுறுப்பு அடைந்துள்ளார்.

இத்தேர்தலில் தோற்றால் தங்களது அரசியல் வாழ்வு சரிந்துவிடும் என்பதால் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தினும், அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனும் அருப்புக்கோட்டை தொகுதியில் தீவிர போட்டியை எதிர் கொண் டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x