Published : 11 Apr 2016 08:04 AM
Last Updated : 11 Apr 2016 08:04 AM

வேறொரு கட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க திமுக, அதிமுக கூட்டு சேர்ந்து சூழ்ச்சி: தேமுதிக பொருளாளர் இளங்கோவன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் வேறொரு கட்சி ஆட்சி அமைக்கக்கூடாது என்பதில் திமுகவும் அதிமுகவும் அரசியல் சூழ்ச்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன என்று தேமுதிக பொருளாளர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

திமுக, அதிமுக ஆகிய இரு ஊழல் கட்சிகளுக்கும் மாற்றாக நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்கள் கூட்டணி தேர்தலில் மாபெரும் வெற்றியை அடையும்.

சில எம்எல்ஏக்கள், மாவட்டச் செய லாளர்கள் வெளியேறியதால் தேமுதிகவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் கட்சி யை விட்டு வெளியேறியுள்ளதால், தேமு திகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் எங்கள் தலைவர் முடிவு எடுத்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் சூழ்ச்சியால் நிர்வாகிகள் சிலர் வெளியேறியுள்ளனர்.

தேமுதிகவின் அதிகாரம் முழுவதும் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரிடம் சென்று விட்டதா?

கட்சியின் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையிலும், தொண்டர்கள் என்ற அடிப்படையிலும் யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் கூறலாம். ஆனால், இறுதி முடிவை விஜயகாந்த்தான் எடுப் பார்.

தேமுதிக மாவட்டச் செயலாளர் களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற தாக கூறப்படுகிறதே?

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து பேசினால், கூட்டணி பேச்சுவார்த்தை என செய்திகள் வெளி யாகிறது. ஆனால், மற்ற கட்சிகள் கூட்டணி பற்றி பேசினால் பேரம் என சிலர் செய்தி வெளியிடுவது ஏன்? திமுக, அதிமுகவின் தவறான பிரச்சாரத்தால்தான் இப்படி பொய்யான குற்றச் சாட்டுகளை வெளியிடுகின்றனர். தமிழகத்தில் வேறொரு கட்சி ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் திமுகவும் அதிமுகவும் அரசியல் சூழ்ச்சியுடன் கூட்டணியாக செயல்படுகின்றன.

மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

எல்லா அரசியல் கட்சிகள், பெண்கள், மாணவர்கள் என அனைவரும் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது, தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால், இப்போது படிபடியாக மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்கின்றனர். தேர்தலை கருத்தில்கொண்டு பொய்யான வாக்கு றுதியை ஜெயலலிதா அளித்துள்ளார். தேமுதிக கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் மதுவிலக்கை கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x