Published : 05 Feb 2022 09:08 AM
Last Updated : 05 Feb 2022 09:08 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வரும் 7-ம் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிப்.7 முதல் 15-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 7-ம் தேதிகாஞ்சிபுரம், வேலூர் மாநகராட்சி,8-ம் தேதி ஓசூர், சேலம், ஈரோடு,9-ல் கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், 11-ம் தேதி திருச்சி, தஞ்சை, கும்பகோணத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
12-ம் தேதி கடலூர், சென்னை,தாம்பரம் மாநகராட்சி, 13-ம் தேதிஆவடி, சென்னை மாநகராட்சி,14-ம் தேதி தூத்துக்குடி, நெல்லை,நாகர்கோவில், 15-ம் தேதி சிவகாசி, மதுரையில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி வரும் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, சிவகாசி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் வரும் 7-ம் தேதியும், மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சியில் 8-ம் தேதியும், வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடியில் 10-ம் தேதியும் பிரச்சாரம் செய்ய உள்ளார். சென்னையில் 11-ம் தேதியும், கோவை, திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளில் 14-ம் தேதியும் பிரச்சாரம் செய்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT