2 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: ஜூலை இறுதியில் மெயின் தேர்வு

2 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: ஜூலை இறுதியில் மெயின் தேர்வு
Updated on
1 min read

2 லட்சம் பட்டதாரிகள் எழுதியிருந்த குரூப்-1 முதல்நிலைத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, வணிக வரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 74 காலியிடங் களை நிரப்புவதற்காக குரூப்-1 முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்தத் தேர்வை 2 லட்சத்துக்கும் மேற் பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்த நிலையில், முதல்நிலைத்தேர்வு முடிவு டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிடப்பட்டது. மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண் ணப்பதாரர்களின் பதிவெண்களை இந்த இணையதளத்தில் பார்க் கலாம்.

4 ஆயிரம் பேர் தேர்ச்சி

‘ஒரு காலியிடத்துக்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படை யில் 4,033-க்கும் மேற்பட்டவர்கள் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற் றுள்ளனர். முதல்நிலைத்தேர்வில் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்ற வர்களும் மெயின் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெயின் தேர்வு ஜூலை மாதம் 29, 30, 31-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித் தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in