விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் அலுவலர்களுக்கான துறைத் தேர்வு நடைபெறும் மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் ஆய்வு செய்தார். உடன், ஆட்சியர் மோகன்.
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் அலுவலர்களுக்கான துறைத் தேர்வு நடைபெறும் மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் ஆய்வு செய்தார். உடன், ஆட்சியர் மோகன்.

அனைத்து தேர்வுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் - டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் தகவல்

Published on

விழுப்புரம்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏதேர்வுக்களுக்கான அறிவிப்புஇம்மாதத்திலேயே வெளியிடப்படும். இனி அனைத்து தேர்வுகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் அலுவலர்களுக்கான துறை தேர்வு நடைபெறும் மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், ஆட்சியர் மோகன் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு பதவிஉயர்வு வழங்க வரும் 9-ம் தேதிவரை துறைத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுவழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஓராண்டாக தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையத்யத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் விடைத்தாள் முழுமையாக கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தேர்வு எழுதுபவர்களுக்கும் விடைத்தாளை திருத்துபவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல், நேர்மையான முறையில் விடைத்தாள் திருத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையிலான தேர்வுகளை நடத்திட திட்டமிட்டுஉள்ளது. குறிப்பாக குரூப் 1 தேர்வுகள் மே மாதம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும். மேலும் குரூப் 4 தேர்வு மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதார் எண் கட்டாயம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மொழித் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுஉள்ளது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in