

சென்னை: சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 16 வார்டுகளின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மாவட்ட தலைவர்கள் 5 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளன. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் 16 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வார்டு 6 – எம்.சாமுவேல் திரவியம், வார்டு 22-ல் அ.தீர்த்தி, வார்டு 50-ல் ரா.சுரேஷ்குமார், வார்டு 37-ல் ஜெ.டில்லிபாபு, 63-ல் சிவ.ராஜசேகரன், 109-ல் எ.சுகன்யா, 96-ல் எஸ்.தனலட்சுமி, 77-ல் சுமதி, 170-ல் எம்.ஏ.முத்தழகன், 134-ல் சுசீலா கோபாலகிருஷ்ணன், 173-ல் டி.சுபாஷினி, 126-ல் அமிர்த வர்ஷினி, 165-ல் நாஞ்சில் வி.ஈஸ்வரபிரசாத், 79-ல் மோ.பானுபிரியா, 92-ல் ஜி.முரளி, 31-ல் பி.சங்கீதா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 16 வேட்பாளர்களில் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டில்லி பாபு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் ஆகியோரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.