

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் 33-வது வார்டில் நாளிதழ்களின் முகவராக உள்ளவரின் தாயார் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
காஞ்சிபுரம், அழகியசிங்க பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இன்பசேகரன். இவரது மனைவி பத்மாவதி. இவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 33-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று முன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இவருக்கு பிரகாஷ் என்ற மகனும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். பிரகாஷ் காஞ்சிபுரத்தில் நாளிதழ்களின் முகவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.