கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களுக்கு கடிதம்: சமூகநீதி கூட்டமைப்பில் இணைய மு.க.ஸ்டாலின் அழைப்பு

கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களுக்கு கடிதம்: சமூகநீதி கூட்டமைப்பில் இணைய மு.க.ஸ்டாலின் அழைப்பு

Published on

சென்னை: நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் சமூகநீதி கூட்டமைப்பில் இணையும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுகதலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து கடந்த 2-ம் தேதி நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள் 38 பேருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி,அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நீதிபதியுமான ஈஸ்வரய்யா, ஏஐஓபிசி கூட்டமைப்பு பொதுச் செயலர் கோ.கருணாநிதி, பிஏஎம்சிஇஎப் அமைப்பின் பி.டி. போர்கர், பிஏஜிஏஏஎம் அமைப்பின் நிறுவனர் தஜிந்திர் சிங் ஜல்லி, சாமாஜிக் சேத்னா அமைப்பின் நிறுவனரும், முன்னாள் நீதிபதியுமான வீரேந்திர சிங்யாதவ், லீட் இந்தியா அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹரி எப்பனப்பள்ளி ஆகியோருக்கும் அழைப்புவிடுத்து நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in