Published : 19 Apr 2016 05:03 PM
Last Updated : 19 Apr 2016 05:03 PM

விருதாச்சலம் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி திமுக வேட்பாளர் தங்க ஆனந்தன் மாற்றப்பட்டு கோவிந்த சாமி (எ) பாவாடை கோவிந்தசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை 3 முறை திமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி வேட்பாள ராக அறிவிக்கப்பட்ட தங்க ஆனந்தன் மாற்றப்பட்டு, கோவிந்தசாமி (எ) பாவாடை கோவிந்தசாமி போட்டி யிடுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட 8 கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதி களை ஒதுக்கிய திமுக, 173 தொகுதி களுக்கான வேட்பாளர்களை கடந்த 13-ம் தேதி அறிவித்தது. மனிதநேய மக்கள் கட்சி, தங்களுக்கு ஒதுக்கப் பட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியை கடந்த 15-ம் தேதி திரும்ப ஒப்படைத்தது. அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஜி.ஆர்.வசந்த வேல் அறிவிக்கப்பட்டார்.

பல தொகுதிகளில் வேட்பாளர் களை மாற்றக் கோரி திமுகவினர் போராட்டங்களை நடத்தினர். பாளை யங்கோட்டை தொகுதி வேட்பாளர் டி.பி.எம்.மைதீன்கானை மாற்றக் கோரி நூற்றுக்கணக்கான திமுகவினர் கரு ணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையே, கடந்த 16-ம் தேதி ஒரத்தநாடு, அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளர்கள் மாற்றப் பட்டனர். அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் போட்டியிடும் ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் தம்பி எஸ்.எஸ்.ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்ததால் முன்னாள் எம்எல்ஏ என்.ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளராக அறி விக்கப்பட்ட எஸ்.பவானிக்கு எதிராக போராட்டங்கள் வலுத்ததால் அவர் மாற்றப்பட்டு என்.ராஜ்குமார் வேட் பாளராக அறிவிக்கப்பட்டார்.

அடுத்ததாக, சோழவந்தான் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட டாக்டர் பிரியா தேன்மொழியும் போட்டியிட முன்வராததால், அவருக்கு பதிலாக சி.பவானி புதிய வேட்பாளராக அறி விக்கப்பட்டார்.

இந்நிலையில் 3-வது முறையாக விருத்தாசலம் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக 7 முறை அதாவது 26 வேட்பாளர்களை மாற்றியுள்ளது. அதிமுகவைப் போல திமுகவிலும் வேட்பாளர்கள் மாற்றம் தொடர்வது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக வேட்பாளர்கள் கலக்கம் அடைந் துள்ளனர்.

ஸ்டாலின் புறக்கணிப்பு

இந்த நிலையில் நேற்று மாலை திமுக பொருளாளர் ஸ்டாலின் விருத் தாசலத்தில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அவர் அங்கு வரு வதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக வேட்பாளர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது. இதனால் ஸ்டாலின், விருத்தாசலத்தில் பிரச்சாரம் மேற் கொள்ளாமல் நெய்வேலிக்கு புறப் பட்டார்.

தீக்குளிக்க முயற்சி

வேட்பாளரை திடீரென மாற்றி யதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தங்க.ஆனந்தனின் ஆதரவாளர்கள் விருத் தாசலம் பாலக்கரை முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வேட்பாளர் தங்க.ஆனந்தனும் கலந்து கொண்டார். அப்போது அக்கட்சியைச் சேர்ந்த இருவர் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டனர். உடனிருந்தவர்கள் அவர்களை தடுத்து காப்பாற்றினர். விருத்தாசலம் வேட்பாளர் மாற்றமும், மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமும் நடைபெறுவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x