

திருச்சி மாநகராட்சி 27-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்பழகன் மேயராக வாய்ப்புள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டி மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் 27-வது வார்டுக்கு உட்பட்ட தென்னூரில் நேற்றிரவு நடைபெற்றது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைர மணி முன்னிலை வகித்தார். திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
இந்த வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி பெற்றால், அவருக்கு மேயராகும் வாய்ப்பு உள்ளது. யார் மேயர் என்பதைச் சொல்லுமி டத்தில் நான் இல்லை. ஆனால், திருச்சிக்கு மேயராக யார் வர வேண்டும் என்பதை கேட்கும் இடத்தில் நான் இருக்கிறேன். நான் கேட்டால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் தட்டமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே, இந்த வார்டில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதா மேயராக இருந்தார். அதிர்ஷ்டமான வார்டு இது. எனவே இப்பகுதியிலுள்ள அனைத்து மக்களும் ஆதரவு கொடுத்து அன்பழகனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து மாநகரச் செயலாளரும், வேட்பாளருமான மு.அன்பழகன் பேசும்போது, “முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அவர் சொல்வதைச் செய்து முடிப்பேன். இப்பகுதியின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வருவேன்” என்றார்.
கூட்டத்தில், வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியா கராஜன் எம்எல்ஏ, மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, 23-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுரேஷ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் அன்பழகன், மதிவாணன் ஆகியோ ரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் முக்கியமானதாக கரு தப்படுகிறது.