கோவை: குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

படம் ஜெ.மனோகரன்
படம் ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: கோவையில் 32-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் மகேஷ்வரன் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தது கவனம் ஈர்த்தது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் முக்கியக் கட்சிகள் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

அந்த வகையில், கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில், பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருவதைக் சுட்டிக்காட்டும் விதமாக, 32-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மகேஷ்வரன் குதிரையில் வந்து வேட்மனு தாக்கல் செய்தார்.

மகேஷ்வரன் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததை, அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் வியப்பாக பார்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in