

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தலைவர் கரு ணாநிதியை கோபாலபுரம் இல்லத் தில் ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், தொழி லாளர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என்று எல்லாதரப்பு மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டுள்ளது. எனவே, வரும் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகனாக இருக்கும். கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, முழு மதுவிலக்கு, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், நீர்ப்பாசனத்துக்கு தனி துறை போன்ற அம்சங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
திமுகவைப் பொறுத்தவரை ‘சொன்னதைச் செய்வோம், செய் வதைச் சொல்வோம்’ என்பதுதான் வரலாறு. பாமக தேர்தல் அறிக் கையை திமுக காப்பி அடித்துள்ள தாக ராமதாஸ் கூறியிருக்கிறார். அவரது தேவையற்ற கருத்துக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இவ் வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.