Last Updated : 03 Apr, 2016 10:00 AM

 

Published : 03 Apr 2016 10:00 AM
Last Updated : 03 Apr 2016 10:00 AM

‘சீட்டெல்லாம் கிடையாது, கிளம்புங்க’ என்று ஸ்டாலின் சொன்னதால் தனித்துப் போட்டியிட ஜனதா தளம் முடிவு

சிறுசிறு அமைப்புகளுக்கெல்லாம் ‘சீட்’ கொடுத்துள்ள திமுக, தேசி யக் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்தை அவமதித்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் அக்கட்சி யின் மாநிலத் தலைவர் பி.முகம்மது இஸ்மாயில், பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ் உள்ளிட்டோர் திமுகவுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சென்னை சென்றிருந்தனர். பின்னர், அங்கு நடந்த நிகழ்வுகளால் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்கள்.

அதுகுறித்து க. ஜான்மோசஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது, அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்து, ‘அதிமுகவை வீழ்த்துவதற்காக உங்களோடு கை கோர்க்கிறோம்’என்று சொன்னோம். அவர் நன்றி தெரிவித்தார். ‘எந்தெந்த தொகுதியைத் தருவீர்கள்?’ என்று கேட்டோம். ஒருமாதிரியாகச் சிரித் தார். மறுபடியும் கேட்டோம். ‘நீங்க சீட் கேட்டு வந்திருக்கீங்கன்னு முன் னாடியே தெரிஞ்சிருந்தா, பார்த்தி ருக்கவே மாட்டேன். ஆதரவு தரு கிற இயக்கம்னு நினைச்சுத்தான் உள்ளேயே கூப்பிட்டேன்’என்றார்.

‘அய்யா, ஜனதாதளம் 4 பிரத மர்களை தந்த பேரியக்கம். தேசியக் கட்சி. அதனால ரெண்டு இடமாவது தரணும்’என்று கேட்டோம். ‘இடமெல் லாம் இல்ல. வெளியே நிறைய பேர் காத்திருக்காங்க. தயவுசெஞ்சு கிளம்புங்க’என்று சொல்லிவிட்டார். அவமானமாகப் போய்விட்டது.

கைவிரித்த ம.ந.கூட்டணி

நமது இலக்கு அதிமுகவைத் தோற்கடிப்பது. அதற்கு மக்கள் நலக்கூட்டணியுடன் கை கோர்ப் போமே என்றெண்ணி, வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் போன்றவர்களை சந்தித்துப் பேசினோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக தொடர்பு கொண்டபோது ஜி.ராமகிருஷ்ணன் போனையே எடுக்கவில்லை. திருமா சார்பில் பேசிய ரவிக்குமார், ‘ஆதரவு வேண்டுமென்றால் தாருங்கள்’ என்று கூறிவிட்டார். வைகோ தரப்பிலும் ‘சீட் தர முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள்.

திமுக சீட் இல்லை என்று சொன்னதுகூட கஷ்டமாக இல்லை. மதிமுக சீட் தர மறுத்ததுதான் கஷ்டமாக இருக்கிறது.

அடுத்த திட்டம்?

இது சாதாரண இயக்கம் கிடை யாது. காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்தான் அவரது மறைவுக்குப் பிறகு ஜனதா தளமாக மாறியது. இன்று காங்கிரஸ் தலைமையகமாக உள்ள சத்தியமூர்த்தி பவன் 1976 முதல் 1980 வரையில் எங்கள் தலைமையகமாக இருந்தது.

மாநில தலைவராக இருந்த பா.ராமச்சந்திரன், இந்திரா காங்கிரசில் இணைந்தபோது, கட்சித் அலுவலகத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார்.

தற்போது திமுக, மநகூ எங்களை மதிக்காததால், தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம். எங்கள் கட்சியும் களத்தில் இருக்கிறதென்று பிறகெப்படி வெளியில காட்டிக்கிறது சொல்லுங்க” என்கி றார் சீரியஸாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x