Published : 24 Apr 2016 12:19 pm

Updated : 24 Apr 2016 12:20 pm

 

Published : 24 Apr 2016 12:19 PM
Last Updated : 24 Apr 2016 12:20 PM

ஒரே குடும்பமாக விளங்கும் உலகை உருவாக்குவோம்: லூதர் கிங் ஜூனியர் நினைவு விழாவில் கமல் பேச்சு

கடவுளுக்காக சண்டையிடுவதை விடுத்து, மனிதர்களுக்காக ஒற்று மையை வலுப்படுத்துவோம். ஒத்துழைப்போடு, ஒற்றுமையாக ஒரே குடும்பமாக விளங்கும் உலகை உருவாக்குவோம் என்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவு விழாவில் கமல்ஹாசன் உரையாற்றினார்.

இந்திய - அமெரிக்க கூட்ட மைப்பு (சென்னை பிரிவு), சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட டாக்டர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறிய தாவது:

தான் உயிர் பிழைக்க சக மனிதர் களைக்கூட கொன்று தின்றுவந்த சுயநலமியான மனிதன் பிறகு விவசாயியாக மாறினான். பின்னர், எல்லா வகை உயிரினங்களுக்கும் காப்பாளனாக மாறியுள்ளான். மனித மனம் என்பது மேம்பட்டுத்தான் வருகிறது.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவர் அதிபராகி யுள்ளார். அப்படி நடைபெறும் என்று 1960-களில் கனவிலும் நினைத்துப் பார்க்கவே அஞ்சிய ஒரு நிகழ்ச்சி அல்லவா அது!

நான் பெருமைப்பட பலவிதங் களிலும் காரணமாக இருக்கும் என் (தாய்) நாடு, போர்கள் இப் போதைய காலத்துக்கு ஒவ்வாதவை என்று இன்னமும் நம்பத் தொடங்கவில்லை. கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள போர் செய்வது என்பது பழங்கால நடைமுறை. தன்னுடைய ராணு வத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்று ஜப்பான் நினைக்கும்போது இந்த கருத்தை தெரிவிக்க வேண்டியது காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் புதல்வன் என்ற வகையில் என் கடமை.

ஒரு காலத்தில் நாடும் உலக மும் நன்றாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டோம். அப்படிப் பட்ட கனவில்கூட நாம் விழிப்புணர் வோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஸ்மார்த்த சிந்தனை யாளரும் மாமுனிவருமான ஆதிசங்கரர் சில நூற்றாண்டு களுக்கு முன்னதாகவே ‘ஜாக்ரத் ஸ்வப்னா’ என்று அந்த நிலையை வர்ணித்தார். கனவில் விழித்திருப் பதே அது. ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண் டியது இன்னொரு கனவு. அனைத்து மத சகோதர, சகோதரிகளும் ஒற்றுமையாக இருப்பது பற்றிய கனவு அது. கடவுளுக்காக சண்டை யிடுவதை விடுத்து, மனிதர்களுக் காக ஒற்றுமையை வலுப்படுத்து வோம்.

உலகம் முழுக்க ஒத்துழைப் போடு, ஒற்றுமையாக வாழ்வதைப் பார்ப்பது எவ்வளவு இனிமையா னது. இதை அதிகாரத்தில் உள்ளவர் களும் ஆயுதம் வைத்திருப்பவர் களும் உணரவேண்டும்.

காந்திஜி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்ற மாமனிதர்கள் நம்மிடையே உருவாக வேண்டும். நமக்கு முன் வாழ்ந்து மறைந்த அத்தனை மகான்களும், அடுத்து வரும் தலைமுறை நம்மைவிட உலகை நன்றாக மேம்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே கடமையாற்றிவிட்டுச் சென்றனர். அவர்களது பாதையில் செல்ல விரும்பும் நாம், அவர்களைப் போலவே இந்த உலகைப் புரிந்துகொண்டால்தான் அதை சாதிக்க முடியும். இந்த உலகம் முழுக்க ஒரே குடும்பமாகத்தான் இருக்க முடியும். இல்லாவிட்டால் உலகமே இல்லை.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
உலகை உருவாக்குவோம்.லூதர் கிங் ஜூனியர் நினைவு விழாகமல் பேச்சு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

cartoon

புதிய வைரஸ்!

கார்ட்டூன்
x