

சென்னை: தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் 6, 7-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2 நாட்கள் வறண்ட நிலை
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4, 5-ம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும். 6, 7-ம் தேதிகளில் வடகடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் இருக்கும்.
பிப்.3-ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிடும்படியான அளவில் மழை பதிவாகவில்லை.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.