நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை பத்திரப்பதிவில் ரூ.10,785 கோடி வருவாய்: பதிவுத் துறை செயலர் தகவல்

நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை பத்திரப்பதிவில் ரூ.10,785 கோடி வருவாய்: பதிவுத் துறை செயலர் தகவல்
Updated on
1 min read

சென்னை: பதிவுத்துறையில் நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை ரூ.10,785.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பதிவுத் துறையில் நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதம் வரைரூ.10,785.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருவாய் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும். அதாவது 2018-19-ல் ஜனவரி வரை ரூ.8,937.45கோடியாகவும், 2019-20 ல் ஜனவரி வரை ரூ.9,145.06 கோடியாகவும், கடந்த நிதியாண்டில் ஜனவரி வரை ரூ.7,927.30 கோடியாகவும் வருவாய் இருந்தது.

வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் தலைமையில் அனைத்து மண்டலங்களிலும் பதிவுத்துறை பணி சீராய்வுக் கூட்டங்கள், காணொலி காட்சி மூலம் வாராந்திர கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இக்கூட்டங்களில் அரசின் வருவாயை எவ்வித விடுதலும் இல்லாமல் வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும், தணிக்கை இழப்புகளை வசூலிக்க வேண்டும்என்றும் கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக பேரிடர் ஏதும்இல்லாத காலத்தில் பெறப்பட்ட வருவாயை விட கடந்த ஜனவரி மாதத்தில் பதிவுத் துறையின் வருவாய் அதிகரித்துள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பேரிடர் ஏதும் இல்லாத காலத்தில் பெறப்பட்ட வருவாயை விட கடந்த ஜனவரி மாதத்தில் பதிவுத் துறையின் வருவாய் அதிகரித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in