

சென்னை: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமேமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 96 சதவீதம்பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகஅரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக தற்போது கரோனா பாதிப்புபடிப்படியாக குறைந்து வருகிறது.கரோனா 2-வது அலையின்போது நிறைய பேர் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
ஆனால், தற்போது 3-வது அலையில் நிறைய பேர் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் 4 சதவீதம் பேர்மட்டுமே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை உள்ளது. 96 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் 33 லட்சத்து 75 ஆயிரத்து 329 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு, 31 லட்சத்து 59 ஆயிரத்து 694 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 1 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவத் துறை மற்றும் மாநகராட்சி சார்பில் சாதாரண படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடியபடுக்கைகள், ஐசியூ படுக்கைகள்என 2,067 கோவிட் மையங்களில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 144 படுக்கைகள் தயார் செய்யப்பட்ட நிலையில், தற்போது 7,981 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 35 ஆயிரத்து 380 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.