Published : 04 Feb 2022 07:08 AM
Last Updated : 04 Feb 2022 07:08 AM

கடந்த 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில்4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோதமாக பேனர்கள் மற்றும் ப்ளக்ஸ் போர்டுகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதஅதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்றஅவமதிப்பு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள்பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதிபி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர்பிரபாகர் சார்பில் கூடுதல் அரசுதலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீ்ந்திரன் ஆஜராகி அறிக்கை தாக்கல்செய்தார். அதில், ‘‘கடந்த 2016-ம்ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சட்டவிரோதமாக பேனர்கள்வைத்தது தொடர்பாக 10,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேனர்கள் வைப்பதற்கு உரிமம்வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்பாக பின்பற்றும்படிமாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி அலுவலர்களுக்கும், தமிழக டிஜிபி-க்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2021 அக்டோபர் முதல் ஜன.31 வரை 4 மாதங்களில் தமிழகம் முழுவதும் 4,717சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பேனர்கள் அகற்றும் செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க அறிவுறுத்தி, விசாரணையை பிப்.18-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x