Published : 04 Feb 2022 08:47 AM
Last Updated : 04 Feb 2022 08:47 AM

மருத்துவர்களுக்கு ஆதரவாக கடந்த ஆட்சியில் குரல் கொடுத்த திமுக எங்கே போனது? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

சென்னை: மருத்துவர்களுக்கு ஆதரவாக கடந்த ஆட்சியில் குரல் கொடுத்ததிமுக இன்று எங்கே போனது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா முதல் அலையின்போது மருத்துவர்கள் இரவு, பகல்பாராமல் சேவையாற்றினர். தமிழகத்தில் கரோனாவால் இதுவரை 9 அரசு மருத்துவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு இதுவரை எந்த நஷ்டஈடும்தரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியாக மேம்பட்டு வந்தசுகாதாரத் துறை இந்த 8 மாதங்களாக பெரும் பின்னடைவை சந்தித்திருப்பது கவலை அளிக்கிறது.

2021 ஆகஸ்ட் மாதம் 34 மருத்துவர்களின் மறைவுக்கு அரசு தலாரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியது. அதில், ஒருவர் மட்டுமே அரசு மருத்துவர். மற்ற 33 பேரும் தனியார் மருத்துவர்கள். மற்ற முன்களப் பணியாளர்களின் நிலை என்ன என்று அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

பிற மாநில மருத்துவர்களுக்கு 5 ஆண்டு பணி அனுபவத்தில் வழங்கப்படும் மாத வருமானம், தமிழக மருத்துவர்கள் 12 ஆண்டுகள் பணியாற்றிய பிறகே வழங்கப்படுகிறது. மருத்துவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தமிழக அரசுஉடனே வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் மருத்துவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுபோல கபட நாடகம் ஆடியதிமுக இன்று எங்கே போனது? தமிழக மருத்துவர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தை கண்டுகொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் அலட்சியம் காட்டியுள்ளார். இதுவே திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு சான்று.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x