

நவீன இந்தியாவின் கோயில்கள் என்று 1948-ல் ஜவகர்லால் நேருவால் அழைக்கப்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், சுதந்திரத்துக்குப் பின் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
நாட்டின் வேலைவாய்ப்பை பெருக்கிடவும், தொழில்துறையை வளர்த்திடவும் நேரு தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சி.சுப்ரமணியம், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோ ரது முயற்சியால் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாயின. நாட்டில் இன்று 290 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு ரூ.5.8 லட்சம் கோடி. இதன் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வந்தது.
1990-ம் ஆண்டு வரை லாப நோக்கத்தைவிட சமூக பொருளாதார வளர்ச்சியை மையப் படுத்தி இயங்கி வந்த பொதுத் துறை நிறுவனங்களில், புதிய பொருளாதார கொள்கைகள் அமல் செய்யப்பட்ட பின், இந்நிறுவனங்கள் திறமையாகச் செயல்பட்டு நஷ்டங்களைத் தவிர்த்து லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காக இதன் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டன.
இதன் முதல்கட்டமாக பணி யாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு, ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிரந்தர தன்மையுள்ள பணிகளில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங் களில் லாபம் உயர தொடங்கியது.
தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொமுச மாநில பொதுச்செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது: கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 11-ம் தேதி பொதுத்துறை நிறுவனங் கள் நாளாக கடைபிடிக்கப் படுகிறது. புதிய பொருளாதார கொள்கையின்படி அரசு தன்னுடைய இதர செலவினங் களுக்காக பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி லாபகரமான பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள், பெருநிறுவனங்களாலும் பெரு முதலாளிகளாலும் விலைக்கு வாங்கப்படுவதும், மற்றொரு புறம் விலை போகாத பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் லாபத் தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களால் வாங்க வைக்கப்பட்டு நஷ்டப் படுத்தப்படு வதும் நடைபெறுகிறது. மேலும் தொழில் நிறுவனங்களில் 10 சதவீதம் அதிகாரிகள், 90 சதவீதம் தொழிலாளர்கள் பணிபுரிந்த இடங்களில், வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பக் கொள்கையின்படி 60 சதவீதம் தொழிலாளர்களும், 40 சதவீதம் அதிகாரிகளும் பணிபுரியக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அவுட் சோர்ஸிங் திணிக்கப்படுவதால் நிரந்தரப் பணிகள் நிர்மூலமாக்கப்படுகிறது.
‘மக்களிடம் பொதுத்துறை நிறுவனங்களை பிணைப்பது பணிக் கலாச்சாரமே. இந்த பணிக் கலாச்சாரத்தை மேலோங்க செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் தம்முடைய பணியை வெறும் சம்பளத்துக்கான வேலை யாக அல்லாமல், மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தனக்களிக் கப்பட்ட வாய்ப்பு என்று கருதி செயல்படுவதே மக்களை இயல் பாக அந்நிறுவனங்களுடன் பிணைக்கும்.
மக்களிடம் பொதுத்துறை நிறுவனங்களை பிணைப்பது பணிக் கலாச்சாரமே. இந்த பணிக் கலாச்சாரத்தை மேலோங்க செய்ய வேண்டும்.