

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக் கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப் பிக்கும் புதிய நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் பதிவு கடந்த 15-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 5,425 மாணவர்கள் பதிவு செய்தனர். இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஆன் லைன் பதிவு ஒரு லட்சத்தை தாண் டியது. இதுவரையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 304 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருப்பதாகவும், அவர் களில் 53 ஆயிரத்து 824 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட் டணத்தைச் செலுத்தியிருப்பதாக வும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரி வித்தார்.
விளையாட்டுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக் கும் மாணவர்கள் மட்டும் ஆன்லைன் விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.