

மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அருள்அன்பரசுவை அறிவிக்கக் கோரி பூந்தமல்லி அருகே நேற்று காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அக்கட்சி அறிவித்துள் ளது. இந்நிலையில், குமணன் சாவடியில் உள்ள பிஎஸ்என்எல் கோபுரம் உள்ள வளாகத்தினுள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் கள் சிலர் அத்துமீறி நுழைந்தனர்.
மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாள ராக, சோளிங்கர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசுவை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
கேசவன் என்பவர் அலைபேசி கோபுரத்தில் சுமார் 30 அடி உயரம் வரை ஏறி நின்றார். பூந்தமல்லி உதவி போலீஸ் கமிஷனர் அய்யப்பன் தலைமையிலான போலீஸார் அவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர். கேச வனை காவல் நிலையம் அழைத் துச் சென்று எச்சரித்து அனுப்பினர்.