

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 16 அல்லது 17-ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு அஷ்ட லட்சுமி பூஜையில் சிறப்பு அழைப்பாளராக பாஜவின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து வரும் பணத்தை தான் தேர்தலுக்கு செலவு செய்கின்றன. ஆனால், மக்களை ஏமாற்றும் விதத்தில் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்கின்றனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை யில், இளைஞர் திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் அதை சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை உள்ளிட்ட மாநில முன்னேற்றத்துக் கான திட்டங்களோடு வெளியாகும். வரும் 16 அல்லது 17-ம் தேதிகளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்றார்.