Published : 26 Apr 2016 09:07 AM
Last Updated : 26 Apr 2016 09:07 AM

கருணாநிதிக்கு ரூ.13.43 கோடி சொத்து: 5 ஆண்டுகளில் 8.50 கோடி உயர்வு

திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு ரூ.13.43 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 8.50 கோடி அதி கரித்துள்ளது.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கருணா நிதி நேற்று வேட்பு மனுவுடன் பிர மாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப் பிட்டுள்ளபடி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.13.43 கோடி. தயாளு அம்மாள் பெயரில் ரூ.7.52 கோடிக்கும் ராசாத்தி அம்மாள் பெயரில் ரூ.42 கோடிக்கும் சொத் துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள் ளார். கருணாநிதி பெயரில் வாகனங் கள், வீடு ஏதும் கிடையாது. தயாளு அம்மாளுக்கு 176 கிராம் தங்கமும், ராசாத்தி அம்மாளுக்கு 640 கிராம் தங்கமும் உள்ளன. 2011-ல் ரூ.4.93 கோடியாக இருந்த கருணாநிதியின் சொத்து மதிப்பு, தற்போது ரூ.13.43 கோடியாக அதிகரித்துள்ளது.

கருணாநிதி மீது நீதிமன்றத்தில் 14 வழக்குகள் விசாரணைக்கு நிலுவையில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x