Published : 17 Apr 2016 08:08 AM
Last Updated : 17 Apr 2016 08:08 AM

செலவு கணக்கு தொடர்பான புகார்களை விசாரிக்க தேர்தல் பார்வையாளர்கள் 19-ம் தேதி வருகை: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

மத்திய செலவினப் பார்வை யாளர்கள் வரும் 19 அல்லது 20-ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2016 குறித்த கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கையேட்டை வெளியிட்டு, ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணைய அறிவுறுத் தலின்படி, கட்சிக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பணம் கொடுக்காமல் வேட்பாளர் பிரச்சாரம் செய்தாலும், வேட் பாளரின் மொத்தச் செலவு கணக் கில், அந்தப் பிரச்சாரத்துக்கு ஆகும் செலவு சேர்க்கப்படும். ஒரு வேளை பிரச்சாரச் செலவு ரூ.28 லட்சத்தைத் தாண்டினால், தகுதி நீக்கம் செய்வது குறித்து வேட்பாள ருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

பொதுவாகத் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகு தான் தேர்தல் செலவினப் பார்வை யாளர்கள் வருவார்கள். ஆனால், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக, அறிவிக்கை வெளியாவதற்கு முன்பாகவே வரும் 19 அல்லது 20-ம் தேதியில் ஐஏஎஸ், ஐஆர்எஸ் அந்தஸ்தில் உள்ள 12 செலவினப் பார்வையாளர்கள் வருகின்றனர். இவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். செலவு கணக்கு குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் அவர்களிடம் தெரிவிக்கலாம்.

மேலும், தமிழகத் தேர்தல் பாது காப்புக்காக ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 275 கம்பெனி படை யுடன் கூடுதலாக 25 கம்பெனி படை களைக் கேட்டுள்ளோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட வற்றுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்கும் வசதி நேற்று முன்தினம் இரவு 12 மணியுடன் நிறைவடைந் தது. எனவே, இனிமேல் வாக்கா ளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்க முடியாது. ஆன்லைன் மூலம் மொத்தம் 6.84 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத் துக்கு யாரை அழைத்து வந் தாலும், வீடியோவில் பதிவு செய் யப்படுகிறது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு வருபவர்களிடமும், எந்த மாதிரியான உணவு அளிக்கப்படுகிறது? எவ்வளவு பணம் அளித்துள்ளார்கள்? என்பது குறித்து மாதிரி ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கண்காணிப்பு

டாஸ்மாக் மதுபான விற்பனை யைப் பொருத்தவரை, முந்தைய விற்பனை அளவைவிட 30 சதவீதத் துக்கு கூடுதலாக விற்பனை செய்யப்படும் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. பின்னர், அந்த கடைகளில் மொத்த கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆராயப்படும். இதுதவிர, மதுபான ஆலைகளின் உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட வற்றை இணையதள உதவியுடன் இயங்கும் கேமரா மூலம் தனிக்குழு கண்காணித்து வருகிறது.

இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x