

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் 6, 7-வது பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வரும் பிப். 19-ம் தேதி நடைபெற உள்ளது.இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்கள் ஏற்கெனவே 5 கட்டங்களாக வெளியிடப்பட்டன. இந்நிலையில், 6, 7-வது பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
ஆறாவது பட்டியலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம் பேரூராட்சிகள், கடலூர் மாவட்டம் விருதாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிகள், தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகள், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத் திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிகள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், ஆலங்குடி பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல 7-வது பட்டியலில், மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி, வேடசந்தூர், எரியோடு, வடமதுரை, அய்யலூர், நத்தம், பாளையம் பேரூராட்சிகள், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர் நகராட்சி, காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி நகராட்சிகள், ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், முதுகுளத்தூர், மண்டபம், தொண்டி பேரூராட்சிகள், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகள், கண்டனூர், புதுவயல், கோட்டையூர், பள்ளத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, திருப்புவனம், சிங்கம்புணரி, திருப்பத்தூர், கானாடுகாத்தான், நாட்டரசன் கோட்டை, திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகள், முத்தூர், சென்னிமலை, மூலனூர், ருத்ராவதி, கொளத்துப்பாளையம், கன்னிவாடி பேரூராட்சிகள் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் பேட்பாளர்கள் விவரமும் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.