

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சென்னையில் பட்டியலை வெளியிட்டார். அதன் விவரம்: சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர் 4-வது வார்டு ஆர்.ஜெயராமன், ஆர்.கே.நகர் 41-வது வார்டு பா.விமலா, 148-வது வார்டு எஸ்.வெள்ளைச்சாமி, 123-வது வார்டு எம்.சரஸ்வதி, தாம்பரம் மாநகராட்சி 61-வது வார்டு ஆர்.விஜயா, 28-வது வார்டு ஜி.விஜயலட்சுமி, ஆவடி மாநகராட்சி 10-வது வார்டு அ.ஜான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடலூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், சேலம், ஈரோடு,திருப்பூர், சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீஞ்சூர், ஆரணி, பெரணமல்லூர், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்குடி, பேரளம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு, அம்மாப்பேட்டை, பாபநாசம், திருபுவனம், கறம்பக்குடி, அன்னவாசல், கீரனூர் அரிமளம், கீரமங்கலம், கூத்தப்பார், புள்ளம்பாடி, எஸ்.கண்ணனூர், தொட்டியம், மேட்டுப்பாளையம், சிறுகமணி, அரவக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்டம், நங்கவரம், மேச்சேரி, சங்ககிரி, அயோத்தியாபட்டினம், கன்னங்குறிச்சி, பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி, வீரகனூர், கருமாண்டிசெல்லிபாளையம், பெத்தாம்பாளையம், நசியனூர், ஊஞ்சலூர், கிளாம்பாடி, ஊத்துக்குளி, குன்னத்தூர், கொளத்துப்பாளையம், அவினாசி, ஓவேலி, தேவர்சோலை, நடுவட்டம், கீழ்குந்தா, செட்டியார்பட்டி, சேத்தூர், மம்சாபுரம், அபிராமம், கமுதி, புதூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல பொன்னேரி, திருநின்றவூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், விழுப்புரம், கோட்டக்குப்பம்,கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பொன்னேரி, சிதம்பரம்,திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி,புதுக்கோட்டை, துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, முசிறி, புகளூர், மேட்டூர், இடங்கணசாலை, திருமுருகன்பூண்டி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், வெள்ளக்கோவில், கூடலூர்,நெல்லியாளம், சாத்தூர், ராஜ பாளையம், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், ராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரை, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.