Published : 03 Feb 2022 08:14 AM
Last Updated : 03 Feb 2022 08:14 AM
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை அலுவலகத்தில் வரி செலுத்துவோருக்கான உதவி மையம் நேற்று திறக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான சிஜிஎஸ்டி மற்றும் கலால் துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சவுத்ரி இம்மையத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:
தமிழகத்தில் சென்னை புறநகர் ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகம், சென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகம், சேலம், கோவை மற்றும் மதுரை அலுவலகங்களில் வரி செலுத்துவோருக்கான உதவி மையங்கள் உள்ளன.
தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல ஜிஎஸ்டி அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த வணிகர்கள் இந்த மையத்தை 94458 98686 மற்றும் 044 - 283310009 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு, வரி செலுத்துவது தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெறலாம்.
இந்த எண்களில் தொடர்பு கொள்ளும்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தகவல்கள் வழங்கப்படும். மேலும், தொடர்புடைய அலுவலகங்களின் பிரதிநிதிகள் மூலம், 24 மணி நேரத்துக்குள் உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மண்டல ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் எம்.எம்.பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT