

தமிழகத்தைப் போல் புதுச்சேரி யிலும் உள்ளாட்சித் தேர்தலை காலதாமதமின்றி நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல்ஆணையத்திடம் வலியுறுத்தி யுள்ளன.
புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 2006-ம்ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இத்தேர்தல் நடக்கவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட்டு, கடந்த அக்டோபருக்குள் தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டது. இதையடுத்து. ‘செப்டம்பர் 22-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்’ என அறி விக்கப்பட்டது. ‘இடஒதுக்கீட்டில் குளறுபடி’ என உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுவால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைத்து, வார்டு குளறுபடிகளை சரி செய்ய உத் தரவு பிறப்பிக்கப்பட்டது.
2-ம் முறையாக...
இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஒதுக் கீட்டை அரசு திரும்பப் பெற்றது.பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியி னர் இடஒதுக்கீடு இல்லாமல் தேர் தலை நடத்தக்கூடாது என கட்சிகள் வலியுறுத்தின.
இருப்பினும் மாநில தேர்தல் கமிஷன் 2வது முறையாக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தது. ‘பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’ என புதுவை திமுக மாநில அமைப்பாளர் சிவா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைத்தது. உள்ளாட்சித்தேர்தலில் இடஒதுக்கீடு தொடர்பாக நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்றை புதுச்சேரி அரசு அமைத்துள்ளது.
பிறகு அதை விசாரித்த சென்னைஉயர்நீதிமன்ற முதல் அமர்வு, இந்த வழக்கு சம்பந்தமான விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லுமாறு மனுதாரருக்கு அனுமதி அளித்தது.
திமுக உச்ச நீதி மன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந் துள்ளது.
இந்நிலையில் உள்ளாட் சித்தேர்தலை நடத்துவது தொடர் பாக ஆலோசனைக் கூட்டம் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தலைமை தாங்கினார். இதில் பெத்தபெருமாள் (காங்.,) மோகன்தாஸ் (அதிமுக), கீதநாதன் (சிபிஐ), நடராஜன் (சிபிஎம்), மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
“உள்ளாட்சித் தேர்தல் நடத் தவது தொடர்பாக யாருக்குதான் அதிகாரம் உள்ளது? - வார்டு வரையறை மாற்றம் உள்ளிட்டவை என்ன ஆனது?” என்று இக்கூட் டத்தில் காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழகத்தைப் போல...
“தமிழகத்தில் உள்ளது போன்றுஉள்ளாட்சித்தேர்தல் நடைமுறை களை பின்பற்றி, விரைவாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக வலியு றுத்தியது.
“இடஒதுக்கீட்டை இறுதி செய்வது தொடர்பாக ஒரு நபர் ஆணை யம் அமைக்கப்பட்டு, இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவைத்து, நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, விரைவாக தேர்தலை நடத்திஅதிகாரத்தை பரவலாக்க வேண் டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.
“இடஒதுக்கீட்டை காரணமாக வைத்து தேர்தலை தள்ளி போடுவதை ஏற்க முடியாது. இரு மாதத்துக்குள் தேர்தலை நடத்தவேண்டும். இடஒதுக்கீடு இல்லாம லாவது தமிழகத்தைப் போல் தேர்தலை நடத்தவேண்டும்” என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத் தியது.
தேர்தலை நடத்த ஆம் ஆத்மி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சி தரப்பில் வலியு றுத்தினர்.
கூட்டம் தொடர்பாக தேர்தல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியது முடிவுக்கு வரவுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இதுவரை உத்தரவு ஏதும் வரவில்லை. இடஒதுக்கீட்டை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது - தமிழகத்தை போல் தேர்தல் நடத்த கோருகின்றனர். திமுக தரப்பில் தொடர்ந்த வழக்கு வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதன் முடிவை பார்த்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் தேர்தல்துறை அதிகாரிகள் மஞ்சுளவள்ளி, ஆலோ சகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சி புறக்கணிப்பு
தேர்தல் ஆணையம் கூட்டிய இந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு கட்சிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்த நிலையில் ஆளும் கட்சிகளான என்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய கட்சிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.