Published : 03 Feb 2022 09:16 AM
Last Updated : 03 Feb 2022 09:16 AM
ஆம்பூர் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சரிவர பணிக்கு வராதததை கண்டித்து, பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பாரத் அம்பேத்கர் என்பவர் தலைமை ஆசிரியராகவும், ஒரு உதவி தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் என 4 பேர் பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில், கரோனா பரவல் குறைந்து கடந்த 1-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது.
ஒரு மாதம் கழித்து பள்ளி திறந்ததை தொடர்ந்து மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு திரும்பினர். ஆனால், தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் பள்ளிக்கு வரவில்லையாம். இந்நிலையில், நேற்றும் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் பள்ளி வராதததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்கிறார். பள்ளிக்கு சரவர வருவதில்லை. இதனால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே கரோனா ஊரடங் கால் பள்ளிக்கு நீண்ட நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் களின் படிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் குறைய தொடங்கிய பிறகு பள்ளிகள் திறக் கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், வெங் கடாபுரம் அரசு ஒன்றிய தொடக் கப்பள்ளியில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தாமல் இருப்பது மாணவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. உதவி தலைமை ஆசிரியர் மணிமாறன் தேர்தல் பணிக்காக சென்றிருப்பதால் 2 ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது சிரமமாக உள்ளது.
எனவே, பள்ளிக்கு வராமல் அடிக் கடி விடுப்பில் செல்லும் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் மீது பள்ளிக்கல்வித்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாதனூர் வட்டார கல்விஅலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், கல்வித்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை.
பள்ளிக்கு வராமல் மாண வர்களின் எதிர்காலத்தோடு விளை யாடும் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண் டும். தகுதியான தலைமை ஆசிரியர் மற்றும் கூடுதலாக ஆசிரியர்களை இப்பள்ளிக்கு நியமிக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.
இந்த தகவலறிந்த மாதனூர் வட்டார கல்வி அலுவலர் உதயசங்கர் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தலைமை ஆசிரியர் பாரத் அம் பேத்கரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர்.
இதனையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT