

பாமக தேர்தல் அறிக்கை வரும் 10 அல்லது 11-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியும் முடிந்துவிட்டது. நிர்வாகம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, ஊழல் ஒழிப்பு என பல்வேறு தலைப்புகளில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டது. வரும் 10 அல்லது 11-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதன்பின் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தலித்களும் எங்களது சகோதர, சகோதரிகள்தான். தனித் தொகுதிகளில் போட்டியிடவும் பாமகவில் ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களில் தகுதியான நபர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்’’ என்றார்