Published : 26 Apr 2016 07:57 AM
Last Updated : 26 Apr 2016 07:57 AM

தேர்தல் செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு கூறி சைதை தொகுதியில் வேட்பாளருக்கு பணம் கொடுக்கும் வாக்காளர்கள்: இதுவரை ரூ.25 ஆயிரம் வசூலானதாக மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி

தேர்தல்களில் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கப் படுவதாகத்தான் கேள்விப்பட் டிருக்கிறோம். ஆனால், தொகுதி வாக்காளர்களே வேட்பாளருக்கு பணம் கொடுத்து தேர்தல் செலவை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறும் நிகழ்வு சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நடந்துள்ளது.

இதுவரை நடைபெற்ற 14 தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக 8 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. 1967, 1971-ல் திமுக தலைவர் மு.கருணாநிதி இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2006, 2011-ல் நடந்த சட்டப் பேரவை தேர்தல்களில் அதிமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன் வெற்றி பெற்றார். தற்போது இந்த தொகுதியை கைப்பற்ற திமுக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்தவரும், முன்னாள் மேயருமான திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு தொகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக தினமும் காலை 6 மணிக்கு தொடங்கி முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது வாக்காளர்களில் பெரும்பாலானோர் அவர்களின் சொந்த செலவில் பூ மாலைகளும், சால்வையும் அணிவித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் ரூ.50 முதல் ரூ.500 வரையில் வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு கொடுத்து தேர்தல் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக மா.சுப்பிரமணியன் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘சிறு வயதில் இருந்தே இந்த தொகுதி மக்கள் என்னுடன் நெருங்கி பழகி வருகின்றனர். ஆட்சியில் இருந் தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இந்த தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

சமீபத்தில் பெய்த கனமழை யில் சைதை தொகுதிதான் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது, நாங்கள் ஆட்சியாளர் களை எதிர்பார்க்காமல் குழுவாக இணைந்து பணியாற்றினோம். வாக்குகளை சேகரிக்க செல்லும் போது, மக்கள் அவர்களின் சொந்த செலவில் மாலை, சால்வை அணிவித்து வர வேற்பது மகிழ்ச்சியாக இருக் கிறது.

இதுதவிர, சிலர் தங்களிடம் இருக்கும் பணத்தை கொடுத்து, தேர்தல் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்து கின்றனர். இதுவரை 25 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x