மயிலை - கராத்தே தியாகராஜன், ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

மயிலை - கராத்தே தியாகராஜன், ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு அந்தக் கூட்டணியில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி சென்னை மயிலாப்பூர் தொகுதியில் கராத்தே ஆர்.தியாக ராஜன், மதுரவாயல் தொகுதியில் நாசே ஆர்.ராஜேஷ், திருப்பெரும்பதூரில் கே.செல்வப் பெருந்தகை, செய்யாறு தொகுதியில் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங் கேயத்தில் பி.கோபி, சிவகாசியில் ஸ்ரீராஜ் சொக்கர், ஸ்ரீவைகுண்டத்தில் ராணி வெங்கடேசன் மற்றும் கிள்ளி யூரில் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உதகை வேட்பாளர் மாற்றம்

உதகமண்டலம் தொகுதிக்கு ஏற்கெனவே ஆர்.கணேஷ் வேட் பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய அறிவிப்பில் அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக பி.ராமச்சந் திரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in