Published : 05 Apr 2014 03:23 PM
Last Updated : 05 Apr 2014 03:23 PM

புதுச்சேரியில் விஜயகாந்த் படம், கட்சிப் பெயர் பயன்படுத்த தடை

புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்தையும், கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, பாமக வேட்பாளரை அறிவித்துள்ளது.

இரண்டு கட்சிகளில் யாரை ஆதரித்தாலும் கூட்டணிக்குள் பிரச்சினை ஏற்படும் என கருதி இந்த முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x