Published : 01 Feb 2022 08:12 AM
Last Updated : 01 Feb 2022 08:12 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து பாஜக விலகிய நிலையில் 2,656 வேட்பாளர்கள் கொண்ட 2, 3-ம் கட்ட பட்டியல்களை அதிமுக வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக 30-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், 2-ம் கட்டபட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டனர்.
மாநகராட்சிகளை பொருத்தவரை சேலம் 60, ஆவடி 48, திருச்சி 65,மதுரை 100, சிவகாசி 48, தூத்துக்குடி 60 என 381 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நகராட்சிகளை பொருத்தவரை தேனி மாவட்டத்தில் பெரியகுளம் 30,தேனி அல்லி 33, கூடலூர் 21, போடி 33,கம்பம் 33, சின்னமனூர் 27, சேலம் புறநகர் மாவட்டத்தில் எடப்பாடி 30, மேட்டூர் 30, ஆத்தூர் 33, நரசிங்கபுரம் 18, தாரமங்கலம் 27, இடங்கணசாலை 27 என வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் செங்கல்பட்டு 33, மறைமலை நகர் 21, நந்திவரம் கூடுவாஞ்சேரி 30, திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் பூவிருந்தவல்லி 21, திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் திருவேற்காடு 18, திருநின்றவூர் 27, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் திருவள்ளூர் 27, திருத்தணி 21, திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் செய்யாறு 27, வந்தவாசி 24, ஆரணி 31, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை 39, கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி 33, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி 26, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் 30,சத்தியமங்கலம் 27, புன்செய்புளியம்பட்டி 18, திருச்சி புறநகர் வடக்கில் துறையூர் 24, முசிறி 24, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் துவாக்குடி 21, மணப்பாறை 27, லால்குடி 24, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 21, அரியலூர் 18 என்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் 34, வேதாரண்யம் 21, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி 24, மயிலாடுதுறை 36, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூர் 27, விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் சாத்தூர் 24, அருப்புக்கோட்டை 36, விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் விருதுநகர் 36, ராஜபாளையம் 42,வில்லிப்புத்தூர் 33, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 36, தேவகோட்டை 27, சிவகங்கை 27, மானாமதுரை 27, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி 36, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் 27, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் 24 ஆகிய நகராட்சிகளில் நிறுத்தப்படும் 1,471 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை 3-ம் கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டது.
3-ம் கட்ட பட்டியல்
மாநகராட்சிகளில் காஞ்சிபுரம் 45, வேலூர் 57, ஒசூர் 45, ஈரோடு 60, தஞ்சாவூர் 50, கும்பகோணம் 45, திண்டுக்கல் 47, நாகர்கோவில் 50 என 399 வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள், நகராட்சிகளில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் 22, குன்றத்தூர் 27, செங்கல்பட்டு கிழக்குமாவட்டம் மதுராந்தகம் 24, திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி 26, வேலூர் புறநகர் மாவட்டத்தில் குடியாத்தம் 34, பேரணாம்பட்டு 21, கடலூர் தெற்கு மாவட்டம் வடலூர் 27, நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் 36, குன்னூர் 30, கூடலூர் 21, நெல்லியாளம் 21, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை 30, அதிராம்பட்டினம் 26, தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி 33, சுரண்டை 27 ஆகிய 405 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT