Published : 01 Feb 2022 08:38 AM
Last Updated : 01 Feb 2022 08:38 AM

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மாணவியை வீடியோ எடுத்தது ஏன்? - பதிவு செய்த முத்துவேல் விளக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பள்ளி மாணவி சிகிச்சை பெறும்போது வீடியோ எடுத்த, விஎச்பி அரியலூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த17-ம் தேதி எனது நண்பர் மகாலிங்கம் ‘எனது உறவினரான சிறுமி ஒருவர் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர்விவரம் அறியாதவர்கள். குடும்பத்தினர் யாரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். நீங்கள்தான் உதவ வேண்டும்’ என கேட்டார்.

இதையடுத்து, அன்றுமாலை அங்கு சென்றேன். அப்போது மாணவியின் சித்தி என்னிடம், ‘மாணவியிடம் பலரும் வாக்குமூலம் வாங்குகிறார்கள். ஆனால், எங்களிடம்யாரும் எதுவும் கேட்கவில்லை. எனவே, நீங்களும் ஒரு வீடியோ எடுத்து தர வேண்டும்’’ எனக் கேட்டார்.

அதன் பின்பு, மாணவியிடம் பேசி வீடியோ பதிவுசெய்தேன். இதுகுறித்து அரியலூர் போலீஸாரிடம் கூறியபோது, அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பின்னர், மாணவியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், 19-ம் தேதி ஊர் மக்கள் சுமார் 300 பேருடன் அரியலூரில் உண்ணாவிரதம் இருந்தோம்.

மாணவி இறந்த பிறகு நான் எடுத்த வீடியோவை போலீஸாரிடம் கொடுக்க முயன்றோம். அவர்கள் அதை வாங்கிக் கொள்ள தயாராக இல்லை.

அதன் பின்பு, நான் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வல்லம் டிஎஸ்பியிடம் செல்போனை ஒப்படைத்தேன். அதைத் தொடர்ந்து 2-வது வீடியோ வெளியானது.அதை யார் வெளியிட்டதுஎன தெரியவில்லை.

சித்தி கொடுமை, மதமாற்றம் என எல்லா வழியிலும் மாணவியின் தற்கொலையை விசாரிக்கவேண்டும். ஆனால், மதமாற்றம் விஷயத்தை மட்டும்ஏற்க மறுக்கிறார்கள். அந்தமாணவி இறக்கும் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்பதால், அதை மாணவியின் மரண வாக்குமூலமாகத்தான் போலீஸார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x