பிரபலங்கள் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு ஓட்டம்

பிரபலங்கள் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு ஓட்டம்
Updated on
1 min read

சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் திரைப் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

இன்று (ஜூன் 26) அகில உலக போதைப் பொருள் தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சார்பில் போதைப் பொருள் உபயோகிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை நடந்த இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை நீதிபதி ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார்.

நடிகர் சிவகார்த்திக்கேயன், நடிகை தேவையானி, பாடகி ஷைலஜா போன்ற பல பிரபலங்கள் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்குப்பெற்றனர். இதோடு, இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் பலரும் இந்த ஓட்டத்தில் பங்குபெற்றனர். போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்களை ஏந்தி பலர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in