பார்வர்டு பிளாக் தலைமையில் சிங்கக் கூட்டணி

பார்வர்டு பிளாக் தலைமையில் சிங்கக் கூட்டணி
Updated on
1 min read

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மதுரையில் சிங்கக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இது குறித்து பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலர் பி.வி.கதிரவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் ந.சேதுராமன் ஆகியோர் நேற்று கூறியதாவது:

தென் மாவட்டங்களில் 3-ல் ஒரு பங்கு எண்ணிக்கையில் உள்ள முக்குலத்தோரை ஒன்றிணைப்பதற்காக சிங்கக் கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலில் சிங்கம் சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.

சட்டப் பேரவைத் தேர்தலில் 45 தொகுதிகளில் போட்டியிட உள்ள இந்த கூட்டணி தற்போதைய தேர்தலுக்கு மட்டுமின்றி உள்ளாட்சி, மக்களவை தேர்தல் என தொடர்ந்து ஒன்றாக இணைந்து செயல்படும். இன்று (நேற்று) முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

உசிலம்பட்டி, மேலூர், நாங்குநேரி, முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் பார்வர்டு பிளாக் கட்சியும், தென்காசி, கடையநல்லூர், விளாத்திகுளம், சிவகாசி, நன்னிலம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, ராமநாதபுரம், திருச்சுழி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மூவேந்தர் முன்னணி கழகமும் போட்டியிட உள்ளன என்றார்.

முதல் கட்டமாக மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் 19 தொகுதிகளுக்கும், பார்வர்டு பிளாக் சார்பில் 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட பட்டியல் நாளை (ஏப்.23) வெளியிடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in