

ஞாயிறுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கரோனா மூன்றாவது அலை காரணமாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம், சுற்றுலா தலங்களின் பார்வை நேரம் குறைப்பு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. தற்போது, கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால், மூன்று வாரங்களுக்குப் பிறகு நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்கள் நேற்று திறக்கப்பட்டன.
உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காக்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.