

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையராக ரவி உத்தரவுப்படி நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆணையராக எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஸ்டார்மிங் ஆபரேஷன்’ நடைபெற்றது.
6 உதவி ஆணையர்கள், 10 ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள், 100 காவலர்கள், 10 ஊர்க்காவல் படையினர் இரவு 10 மணிமுதல் 1 மணிவரையும், 1 மணிமுதல் 4 மணிவரையும், இரு பிரிவாக இந்த ஆபரேஷன் நடைபெற்றது. இதில், 300 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு குடிபோதையில் இருந்த 10 பேர், இருசக்கர வாகனத்தில் 3 பேருக்கு மேல் அமர்ந்து வாகனம் ஓட்டி வந்த 5 பேர், முகக்கவசம் அணியாத 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல், சந்தேகப்படும்படியான நபர்கள் 17 பேரைப் பிடித்து விசாரித்து அவர்களில் இருவர் மீது நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றியும், வாகன தணிக்கையில் சந்தேகப்படும் நபர்கள் 20 பேரிடம் விசாரணை செய்தும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி, கடைகளை திறந்து வைத்திருந்த 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல் ஆணையராக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.